"எனது மகளை அவரது கணவன் அடித்து கொலை செய்துவிட்டான்" - சித்ராவின் தாயார்

0 17982

நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நாசரேத்பேட்டையில் உள்ள ஓட்டலில் நடிகை சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேம்நாத்திடம் நேற்று முதல்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் தொழில் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சித்ராவிற்கு தொழில் ரீதியான பிரச்சனை இல்லை என்றும் ,குடும்ப ரீதியான பிரச்சனைகள் பெரும்பாலும் ஹேம்நாத்தை சுற்றியே இருக்கிறது என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சித்ரா மரணத்தின் போது அறையின் வெளியில் இருந்தது ஏன் என்பது தொடர்பாக ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதனிடையே தனது மகளின் மரணத்திற்கு மருமகன் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் தாயார் விஜயா குற்றம் சாட்டியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments